செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சென்னையில் இன்று புதிதாக 1,842 பேருக்கு கொரோனா: மாவட்டம் வாரியாக முழு விவரம்....

Published On 2020-07-04 13:51 GMT   |   Update On 2020-07-04 13:51 GMT
செங்கல்பட்டில் இன்று கொரோனாவுக்கு 215 பேரும், மதுரையில் 352 பேரும், திருவள்ளூரில் 251 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து ஏழு நாட்களாக கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,500-ஐ தாண்டிய நிலையில், கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று மூன்றாவது நாளாக மேலும் 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,001 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.   

மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.  இன்று சென்னையில் 37 பேரும், மதுரையில் 6 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், காஞ்சிபுரத்தில் 4 பேரும், ராமநாதபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூரில் தலா 2 பேரும், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், திருநெல்வேலியில் தலா ஒருவரும் என 65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள 49 அரசு மற்றும் 45 தனியார் என மொத்தம் 94 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  கடந்த 24 மணி நேரத்தில் 36,164 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றில் இருந்து 2,214 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 60,592 ஆக உயர்ந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  

சென்னையில் இன்று 1,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் வாரியாக இன்று புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:-

1. அரியலூர் - 3
2. செங்கல்பட்டு - 215
3. சென்னை - 1842
4. கோவை - 67
5. கடலூர் - 75
6. தருமபுரி - 6
7. திண்டுக்கல் - 22
8. ஈரோடு - 16
9. கள்ளக்குறிச்சி - 21
10. காஞ்சிபுரம் - 134
11. கன்னியாகுமரி - 69
12. மதுரை - 352
13. நாகப்பட்டினம் - 6
14. நாமக்கல் - 04
15. நீலகிரி - 05
16. பெரம்பலூர் - 05
17. புதுக்கோட்டை - 42
18. ராமநாதபுரம் - 149
19. ராணிப்பேட்டை - 104
20. சேலம் - 70
21. சிவகங்கை - 48
22. தென்காசி - 17
23. தஞ்சாவூர் - 03
24. தேனி - 54
25. திருப்பத்தூர் - 48
26. திருவள்ளூர் - 251
27. திருவண்ணாமலை - 173
28. திருவாரூர் - 11
29. தூத்துக்குடி - 64
30. திருநெல்வேலி - 61
31. திருப்பூர் - 02
32. வேலூர் - 85
33. விழுப்புரம் - 57
34. விருதுநகர் - 100
35. கரூர் - 03
36. கிருஷ்ணகிரி - 04
37. திருச்சி - 83

சர்வதேச விமானம் - 03
உள்ளூர் விமானம் - 04
ரெயில் - 02
Tags:    

Similar News