செய்திகள்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை- சென்னை மாநகராட்சி ஆணையர்

Published On 2020-07-04 12:46 GMT   |   Update On 2020-07-04 12:46 GMT
சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் பிராகாஷ் கூறி உள்ளார்.
சென்னை:

சென்னை மாநகராட்சி ஆணையர் பிராகாஷ் கூறியதாவது:-

கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

பொதுமக்கள் அறிகுறிகள் இருந்தால் ஒளிவுமறைவின்றி கூற வேண்டும். கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருந்தாலும் கொரோனா பாதிப்பு விகிதம் குறைவாக தான் உள்ளது.

கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இல்லாமல் போய்விடக் கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். சென்னையில் 65 சதவீதம் பேர் முகக்கவசம் அணிகின்றனர். எஞ்சிய 35 சதவீதம் பேரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

மார்க்கெட், மளிகை, இறைச்சிக்கடைகளில் 22 சதவீத மக்கள் தான் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கின்றனர். சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை. சென்னையில் இன்று 11,200 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் 1000 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 4, 5, 6 ஆகிய மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. போதிய விழிப்புணர்வு, முகக்கவசம் வழங்கப்பட்டதால் சென்னையில் உள்ள குடிசை பகுதிகளில் தொற்று குறைந்துள்ளது என கூறினார்.

Tags:    

Similar News