செய்திகள்
சீல் வைப்பு

சிவகிரி நகர பஞ்சாயத்து அலுவலகத்திற்கு ‘சீல்’வைப்பு

Published On 2020-07-02 11:15 GMT   |   Update On 2020-07-02 11:15 GMT
வரி வசூலிப்பவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சிவகிரி நகர பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
சிவகிரி:

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் கொரோனா தொற்று பரவி வருகிறது. சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணத்தில் இதுவரை 38 பேருக்கும், ராயகிரியில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் நேற்று சிவகிரி நகர பஞ்சாயத்து அலுவலக வரிவசூலிப்பவருக்கு கொரோனா உறுதியானது தெரியவந்தது.

இதனால் அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனையடுத்து சிவகிரி நகர பஞ்சாயத்து அலுவலகம் சீல் வைத்து மூடப்பட்டது. அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நகர பஞ்சாயத்து அலுவலகம் அமைந்துள்ள பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. நகர பஞ்சாயத்து ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவருடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி அவர்களை தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகிரி நகர பஞ்சாயத்தில் பணியாற்றும் நிர்வாக அலுவலர், பதிவு எழுத்தர், இளநிலை உதவியாளர்கள், வரிவசூல் அலுவலர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், வாட்டர் மேன், துப்புரவு பணியாளர்கள் மொத்தம், நிரந்தர பணியாளர்கள் 35 பேருக்கு நேற்று தாலுகா அலுவலகம் அருகே உள்ள கொரோனா தொற்று பரிசோதனை எடுக்கும் மையத்திற்குச் சென்று பரிசோதனை செய்தனர். மேலும் தொகுப்பூதிய பணியாளர்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணியாளர்கள் உள்பட 50 பேர்கள் இன்று (வியாழக்கிழமை) பரிசோதனை செய்ய இருக்கின்றனர். நகர பஞ்சாயத்து அலுவலகம் ‘சீல்‘வைத்து மூடப்பட்டதால் அதற்கு வேண்டிய மாற்று இடங்கள் வேறு தயார் செய்து பணியை தொடங்கி உள்ளனர்.
Tags:    

Similar News