செய்திகள்
கொரோனாவைபோல் வடிவமைக்கப்பட்ட ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரம்

கொரோனாவைபோல் வடிவமைக்கப்பட்ட ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரம்

Published On 2020-07-02 09:28 GMT   |   Update On 2020-07-02 09:28 GMT
தொற்று பரவாமல் தடுக்க கொரோனாவைபோல் வடிவமைக்கப்பட்ட ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் சிவன்அருள், போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதைக் கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை சார்பில் கொரோனாவைபோல் வடிவமைக்கப்பட்ட ஆட்டோ, கை கழுவுதல் அவசியத்தை வலியுறுத்தி வாஷ்பேசின் போல் வடிவமைக்கப்பட்ட ஒரு மினி லாரி, முகக் கவசம் அணிவதை வலியுறுத்தி முகக் கவசம் போல் வடிவமைக்கப்பட்ட மற்றொரு மினி லாரி, தமிழக அரசின் சார்பில் அகண்ட ஒளித்திரை (எல்.இ.டி.டி.வி) மூலம் குறும்படம் திரையிட்டு பொதுமக்களிடையே கொரோனா தொற்று விழிப்புணர்வு பிரசாரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேற்கண்ட வாகனங்கள் கிராமங்கள் தோறும் சென்று பொதுமக்களிடையே பிரசாரம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சிவன்அருள், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று கொடியசைத்தும், ரிமோட்டில் பொத்தானை அழுத்தி அகண்ட ஒளித்திரையில் குறும்படத்தை திரையிட்டும் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சுப்பிரமணியம், சர்க்கரை ஆலை தலைவர் டி.ஆர்.ராஜேந்திரன், அம்பா கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News