செய்திகள்
உயிரிழந்த மகன்-தந்தை

சாத்தான்குளம் வழக்கு- சிபிசிஐடி விசாரணையில் திடீர் திருப்பங்கள்

Published On 2020-07-02 05:15 GMT   |   Update On 2020-07-02 05:15 GMT
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் இன்று அதிகாலை முதல் சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர்.
கோவில்பட்டி:

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர். போலீசார் 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் மற்றும் ஸ்ரீதர் ஆகியோரை அடுத்தடுத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கைது, விசாரணை காரணமாக சிபிசிஐடி அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கைதான ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகனை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.

காவலர் ரேவதியை தொடர்ந்து சிறப்பு எஸ்.ஐ., பால்துரை, முத்துராஜ் ஆகியோர் அப்ரூவராக சாட்சியம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News