செய்திகள்
கோவில்

3 மாதங்களுக்கு பிறகு கிராமப்புற கோவில்களில் பக்தர்கள் அனுமதி

Published On 2020-07-01 03:30 GMT   |   Update On 2020-07-01 03:30 GMT
தமிழகம் முழுவதும் கிராமப்புற கோவில்களில் மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
    
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய 6-ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் ஆண்டுக்கு 10,000 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ள கிராமப்புற கோவில்களில் மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று பக்தர்கள் வழிபட தொடங்கியுள்ளனர். கிராமப்புற தேவாலயங்கள் மற்றும் மசூதிகளிலும் இன்று முதல் வழிபாடு தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்களில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முககவசம் அணிய வேண்டும். அடிக்கடி தரைத்தளம் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் ஆகிய பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.

எனினும், கிராமங்களில் உள்ள பெரிய கோவில்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News