செய்திகள்
சாத்தான்குளம் காவல்நிலையம்

வட்டாட்சியர் கட்டுப்பாட்டுக்குள் வந்தது சாத்தான்குளம் காவல்நிலையம்

Published On 2020-06-30 04:02 GMT   |   Update On 2020-06-30 04:02 GMT
ஐகோர்ட் மதுரை கிளை வழிகாட்டுதலின்படி சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையாக வட்டாட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரி-மகன் உயிரிழந்த வழக்கை விசாரிப்பதற்காக, மதுரை ஐகோர்ட்டால் கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் நியமிக்கப்பட்டார். அவர், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்த சென்றபோது, அவர் கேட்ட ஆவணங்களை தர மறுத்த போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதுகுறித்து மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், மதுரை ஐகோர்ட்டுக்கு இ-மெயில் மூலம் புகார் அனுப்பி இருந்தார்.

இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் ஆகிய 2 பேரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

மேலும் ஐகோர்ட் மதுரை கிளை வழிகாட்டுதலின்படி சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையாக வட்டாட்சியர் செந்தூர்ராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வருவாய் துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் செந்தூர் ராஜன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆவணங்களை சேகரிப்பார் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News