செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஊரடங்கு குறித்து முக்கிய முடிவு - மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் இன்று மீண்டும் ஆலோசனை

Published On 2020-06-28 20:56 GMT   |   Update On 2020-06-28 20:56 GMT
ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ குழுவுடன் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை:

கொரோனா பரவலை தடுக்க ஜூன் 30-ம் தேதி வரை 5-ம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,295 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 45,537 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1079 ஆக அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில், 5-ம் கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இதில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News