செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கக்கூடாது- அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2020-06-28 07:28 GMT   |   Update On 2020-06-28 07:28 GMT
கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களை ஒதுக்கக்கூடாது என்றும் உரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை:

மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கொரோனா பரிசோதனை தொற்று ஏற்பட்டவருக்கான 24 மணி நேரமும் இயங்கும் ஆலோசனை மையம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

மக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து இங்கு வந்தவர்களால்தான் தற்போது தொற்று அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு வார்டுக்கும் கள பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு தோறும் சென்று காய்ச்சல் கண்டறியும் பணியும் மேற்கொள்கின்றனர். தொடர்ந்து வீடு தோறும் காய்ச்சல் கண்டறியப்படுகிறது. கொரோனா தொற்று உறுதியான நபர்களுக்கு மன நல ஆலோசனை தொலைபேசி மூலம் வழங்கப்படுகிறது. அதற்கு தான் தற்போது, இந்த ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டவர்களுக்கு பயம் வரக்கூடாது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களை ஒதுக்கக்கூடாது. உரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பல உயிர் காக்கும் மருந்துகள் வந்துள்ளன. மதுரையை பொறுத்தவரை இறப்பு குறைவு தான். சோதனை அதிகமாக இருப்பதால்  எண்ணிக்கை அதிகமாகிறது. அனைவரையும் சோதனை பண்ண முடியாது. எதிர்கட்சிகள் திட்டமிட்டு வதந்தியை பரப்புகின்றனர்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
Tags:    

Similar News