செய்திகள்
சிறப்பு விமானம்

வெளிநாடுகளில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் -மத்திய அரசு

Published On 2020-06-24 06:45 GMT   |   Update On 2020-06-24 06:45 GMT
வெளிநாடுகளில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்டு அழைத்து வருவதற்காக மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்களை இயக்குவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்த திட்டத்தின்கீழ் விமானங்களை தமிழகத்தில் தரையிறக்க அனுமதிக்க கோரியும், வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மீட்க கோரியும் தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இதுவரை 26 ஆயிரம் தமிழர்கள் 50 விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

Tags:    

Similar News