செய்திகள்
கைது

தஞ்சையில் வீடு புகுந்து திருடிய 3 வாலிபர்கள் கைது

Published On 2020-06-22 08:28 GMT   |   Update On 2020-06-22 08:28 GMT
தஞ்சையில் வீடு புகுந்து திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் அவர்கள் சிக்கினர்.
தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த மாதாக்கோட்டை சுந்தரபுரத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது53). சம்பவத்தன்று இரவு இவர் காற்றுக்காக மாடியில் படுக்க சென்று விட்டார். வீட்டில் அவருடைய மனைவி மற்றும் மகன், மகள் ஆகியோர் படுத்திருந்தனர். காலையில் தேவேந்திரன் எழுந்து கீழே வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு இருந்த 2 செல்போன்கள், வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை காணவில்லை.

இது குறித்து தேவேந்திரன் தஞ்சை தமிழ்பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுகுமாறன், சந்திரசேகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், ஏட்டுகள் இளவரசன், ரமேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வுசெய்தனர். அப்போது அதில் திருடர்கள் வந்த வாகனத்தை வைத்து அவர்கள் திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட குடவாசலை சேர்ந்த பாசித்ராஜா (வயது18), அஜீத்குமார் (19), பரணிதரன் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்படட 3 பேரையும் போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News