செய்திகள்
தமிழக அரசு

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிப்பு- தமிழக அரசு

Published On 2020-06-19 05:32 GMT   |   Update On 2020-06-19 05:32 GMT
சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை:

கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் கோரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியில் கோரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த சந்திரசேகர், வெங்கடேஷ், அனீஷ் சேகர் உள்ளிட்ட 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் 3 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மணிகண்டன், பிரபுசங்கர், அமுதவல்லி ஆகிய 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News