செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-06-18 09:13 GMT   |   Update On 2020-06-18 09:13 GMT
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணாமாக கோவை, நீலகிரி, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லார் 7 செ.மீ மழையும், வால்பாறையில் 6 செ.மீ மழையும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் கோவை மாவட்டம் சின்கோனாவில் 5 செ.மீ மழையும், சோலையாரில் 4 செ.மீ மழையும், தேனி மாவட்டம் பெரியாறு, புதுக்கோட்டை மாவட்டம் குடியியான்மலையில் 3 செ.மீ மழையும், தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News