செய்திகள்
மதுபானம்

பொதுமுடக்கம்- டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

Published On 2020-06-15 12:54 GMT   |   Update On 2020-06-15 12:54 GMT
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதுபற்றி தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் வரும் 19-ம்தேதி முதல் 30-ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News