செய்திகள்
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு

சென்னையில் 60 சதவீதம் ஆண்களை பிடித்த கொரோனா - 30 முதல் 39 வயதினர் அதிகம் பாதிப்பு

Published On 2020-06-07 08:25 GMT   |   Update On 2020-06-07 08:25 GMT
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை:

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக மாநகராட்சி இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு உள்ள புள்ளி விவர அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 59.98 சதவீதம் ஆண்களும், 40.01 சதவீதம் பெண்களும் கொரோனாவின் பிடியில் சிக்கி உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 0.01 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வயது வித்தியாசமின்றி அனைவரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகுகின்றனர். இதில் 30 முதல் 39 வயது வரை உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக 20 முதல் 29 வயதினரும், 40 முதல் 49 வயதினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மட்டும் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண்கள் கொரோனாவின் பிடியில் சிக்கி உள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பில் முதலிடம் வகிக்கும் ராயபுரம் மண்டலம், குணம் அடைவோர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News