செய்திகள்
முகக்கவசங்கள்

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த முகக்கவசம் விலை பாதியாக குறைப்பு

Published On 2020-06-06 13:01 GMT   |   Update On 2020-06-06 13:01 GMT
திருச்சி மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த முகக்கவசம் விலை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் திருச்சி மத்திய ஜெயிலில் 50 ஆயிரம் முகக்கவசங்கள் கையிருப்பு உள்ளது.
திருச்சி:

திருச்சி மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மன அழுத்தத்தை குறைக்க சிறைக்குள் அதிகாரிகள் சோப்பு தயாரித்தல், அட்டைபெட்டி தயாரித்தல் போன்ற பல்வேறு கைத்தொழில்களில் கைதிகளை ஈடுபடுத்தி வருகின்றனர். மேலும் நன்னடத்தை அடிப்படையில் ஜெயில் வளாகத்தில் காய்கறிகள் பயிரிடுதல், கரும்புசாகுபடி, மீன் வளர்த்தல் போன்ற வேளாண் தொழில்களிலும் கைதிகள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

கொரோனா வைரஸ் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து திருச்சி, புழல், வேலூர், கடலூர், மதுரை, பாளையங்கோட்டை, கோவை ஆகிய மத்திய ஜெயில்களில் முகக்கவசம் தயரிக்கும் பணிகள் புதிதாக தொடங்கப்பட்டன. திருச்சி மத்திய ஜெயிலில் 30-க்கும் மேற்பட்ட கைதிகள் இதில் ஈடுபட்டனர். அவர்கள் தினமும் முகக்கவசம் தயாரித்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் ஒரு முகக்கவசம் ரூ.10 விலை நிர்ணயம் செய்து விற்கப்பட்டது. தற்போது வெளியிடங்களில் உற்பத்தி அதிகரித்து விலை குறைக்கப்பட்டு வருவதால் ஜெயிலில் கைதிகள் உற்பத்தி செய்யும் முகக்கவசங்களும் பாதியாக விலை குறைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் திருச்சி மத்திய ஜெயிலில் 50 ஆயிரம் முகக்கவசங்கள் கையிருப்பு உள்ளதாகவும், அதனை மொத்தமாகவோ, சில்லறைக்கோ விற்க தயாராக இருப்பதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News