செய்திகள்
கொரோனா பரிசோதனை

திருச்சியில் வேகமெடுக்கும் கொரோனா - ஒரே நாளில் 700 பேருக்கு பரிசோதனை

Published On 2020-06-06 09:42 GMT   |   Update On 2020-06-06 09:42 GMT
திருச்சியில் நேற்று ஒரே நாளில் 700 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை திருச்சியில் 80 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 112 ஆக உயர்ந் துள்ளது.

இதில் நேற்று ஒரே நாளில் 12 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக முதலில் 4 பி.சி.ஆர். கருவிகள் மட்டுமே இருந்தன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 500 முதல் 600 பேர் வரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்தநிலையில் ரோட்டரி சங்கம் மூலம் ரூ.22 லட்சம் மதிப்பிலான நவீன பரிசோதனை எந்திரம் ஒன்று திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

அதன் மூலம் நேற்று ஒரே நாளில் 700 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகள் இன்று பிற்பகலில் தெரியவரும்.

மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள ஊரடங்கு தளர்வுகளை மக்கள் எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஏகபோகமாக அனுபவிக்க தொடங்கி இருப்பதே நோய் பரவலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

திருச்சி மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெயரளவில் முகக்கவசம் அணிந்திருந்தாலும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் என்பது காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு பஸ்களில் மாலை நேரங்களில் சமூக இடைவெளியை மறந்து மக்கள் கூட்டம் கூட்டமாக நெருக்கியடித்துக் கொண்டு பயணம் செய்கிறார்கள்.

அதேபோல் மார்க்கெட்டுகளிலும் ஒருவரையொருவர் உரசியபடி நின்றுகொண்டு காய்கறி, மளிகை பொருட்கள் வாங்குகின்றனர். டாஸ்மாக் கடைகளிலும் மதுப்பிரியர்களின் நடவடிக்கை அச்சமூட்டுவதாக அமைந்துள்ளது. கடை அடைக்கப்படும் நேரங்களில் முட்டி மோதி நின்று மது பாட்டில்களை வாங்கி செல்கிறார்கள்.

எனவே மீண்டும் டாஸ்மாக் கடைகளில் போலீஸ் மற்றும் தன்னார்வலர்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அரசு பஸ்களில் அனும திக்கப்பட்டுள்ளதை விட கூடுதல் பயணிகள் ஏற்றப்ப டுகிறார்களா? என்பது கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News