செய்திகள்
கலெக்டர் தலைமையில் நடைபெற்ற பாலைவன வெட்டுக்கிளிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

பாலைவன வெட்டுக்கிளிகள் குறித்த ஆலோசனை கூட்டம்- கலெக்டர் தலைமையில் நடந்தது

Published On 2020-06-05 10:50 GMT   |   Update On 2020-06-05 10:50 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலைவன வெட்டுக்கிளிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலைவன வெட்டுக்கிளிகள் வருவதை கண்காணிக்க கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் கூட்டம் கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பாலா வரவேற்றார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு )பேபி பர்வதம், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சுஜாதா, விரிஞ்சிபுரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் வல்லுனர் திலகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பாலைவன வெட்டுக்கிளிகள் வாழ்க்கை முறை மற்றும் தாக்குதல் முறை குறித்தும், நிலங்களை பாதுகாப்பது குறித்தும் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் பேசுகையில், பாலைவன வெட்டுக்கிளிகள் குறித்த முன்னெச்சரிக்கை கூட்டம் தான். எனவே, விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை. வெட்டுக்கிளிகள் எங்காவது கூட்டமாக காணப்பட்டால் கண்காணிப்பு குழுவிற்கோ அல்லது வட்டார வேளாண்மை துறை அலுவலர்களையோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.

கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க உறுப்பினர்கள் மற்றும் அரசுத்துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News