செய்திகள்
கொரோனா நோய் தொற்று பரிசோதனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் விழிப்புணர்வு இல்லாததால் கொரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2020-06-04 13:32 GMT   |   Update On 2020-06-04 13:32 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ராமநாதபுரம்:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்பேரில் கலெக்டர் வீரராகவ ராவ் மாவட்டம் முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். சுகாதாரத்துறை, மருத்து வத்துறை, காவல்துறை, வருவாய் துறை, போன் றோர் சிறப்பான பணி களை மேற்கொண்ட போதிலும் கொரோனா பிடியிலிருந்து விடுவிக் கும் நடவடிக்கைகளை மக்கள் கடைபிடிப்பதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர்.

மாவட்டத்தில் பல் வேறு ஊர்களில் வங்கி களிலும், அரசு அலுவல கங்களிலும்சமூக இடை வெளியை பின்பற்றாமல் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருப்பதை காணமுடிந்தது. இதன் காரணமாக நேற்று வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்த வரை கீழக்கரையை சேர்ந்த மூதாட்டி மட்டுமே உயிர் இழந்தது ஆறுதல் அளிக்கிறது.

சிகிச்சை முடிந்து தற்போது 52 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிகிச்சைப் பிரிவில் 32 பேர் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இதற்கிடையே ராமநாதபுரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மதுரையில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளார்.

அந்த மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் அதிகமான செவிலியர்கள் மருத்துவர்கள் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் டாக்டரின் கொரோனா தொற்று மற்றவர்களுக்கும் பரவி இருக்குமோ என்று அஞ்சப்படுகிறது. மருத்து வருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது ஊரடங்கு தளர்வு செய் யப்பட்டதால் பொதுமக்கள் வழக்கம் போல் செயல் படத் தொடங்கியுள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றாமல் அலட்சியமாக இருந்து வருவதால் மக்கள் மத்தியில் பீதி இருந்து வருகிறது இதனால் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது.கலெக்டர் வீரராகவராவ் அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து கொரோனா நோய் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளை குறித்து அறிவுரை வழங்கி வருகி றார்.

மாவட்ட எஸ்.பி. வருண் குமார் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் வாகன கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

ஏராளமான வாகன ஓட்டிகள் முகக் கவசம் அணியாமல் பயணம் செய்கின்றனர்.
Tags:    

Similar News