செய்திகள்
சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ்

வீட்டில் தனிமைப்படுத்துவது ரத்து- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

Published On 2020-06-04 07:57 GMT   |   Update On 2020-06-04 09:15 GMT
கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி வளாகத்தில் ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பின் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையில் கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இனி அரசின் முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துதலை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் ஒருவருக்கு கொரோனா என்றால் மொத்த குடும்ப உறுப்பினர்களும் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவர்.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தல் ரத்து குறித்து கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், சென்னையில் விதிகளை மீறுவோருக்கு மட்டுமே தனிமைப்படுத்துதல் ரத்து செய்யப்படும்.

சென்னையில் கொரோனா உள்ளவருடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது தொடரும். தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்காதவர்கள் மட்டுமே முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவர் என கூறினார்.
Tags:    

Similar News