செய்திகள்
கைது

ராணிப்பேட்டையில் 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது- போலீஸ் சூப்பிரண்டு தகவல்

Published On 2020-06-04 06:56 GMT   |   Update On 2020-06-04 06:56 GMT
ராணிப்பேட்டையில் கொலை, வழிப்பறி, மணல் கடத்தல், கஞ்சா விற்பனை செய்தல் மற்றும் சாராயம் காய்ச்சுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்த 50 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொலை, வழிப்பறி, மணல் கடத்தல், கஞ்சா விற்பனை செய்தல் மற்றும் சாராயம் காய்ச்சுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்த 50 நபர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பேரில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷனி உத்தரவின்படி அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இனிவரும் காலங்களில் யாரும் குற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் திருந்தி வாழ முன்வந்தால் அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும். மேலும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News