செய்திகள்
கொரோனா வைரஸ்

இலங்கையில் இருந்து கப்பலில் வந்த 60 பேருக்கு திருப்பரங்குன்றம் முகாமில் கொரோனா சோதனை

Published On 2020-06-03 14:18 GMT   |   Update On 2020-06-03 14:18 GMT
இலங்கையில் இருந்து கப்பலில் வந்த 60 பேர் திருப்பரங்குன்றம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடைபெற உள்ளன.
மதுரை:

கொரோனா நோய் தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது.

இலங்கையில் ஊரடங்கால் தவிப்புக்குள்ளான இந்தியாவை சேர்ந்த 713 பேர் நாடு திரும்ப விரும்பினர். அவர்களை இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் அழைத்துக் கொண்டு தூத்துக்குடி துறைமுகம் வந்தது.

அங்கு 713 பேருக்கும் முதல்கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு அவர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் உள்ள தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டனர்.

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு 60 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். 2 பஸ்களில் வந்த அவர்கள் தனிமைப்படுத்தும் முகாமில் வட்டாட்சியர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் மதனகலா ஆகியோர் முன்னிலையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடைபெற உள்ளன.

Tags:    

Similar News