செய்திகள்
மதுரை மாவட்டம்

மதுரையில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரிப்பு

Published On 2020-06-03 14:05 GMT   |   Update On 2020-06-03 14:05 GMT
மதுரை மாநகரில் சைபர் கிரைம் மோசடி குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை:

மதுரை எஸ்.எஸ்.காலனி பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 54). இவருக்கு பேஸ்புக் கணக்கு உள்ளது. இந்த நிலையில் அவருக்கு புதிதாக ஒரு கணக்கில் இருந்து அழைப்பு வந்தது.

அதில் அறிமுகமானவரிடம் சீனிவாசன் அடிக்கடி பேஸ்புக் மூலம் தகவல்களை பரிமாறி உள்ளார்.

இந்த நிலையில் அந்த நபர் எனக்கு பணம் தேவைப்படுகிறது. நீங்கள் கொடுத்து உதவுங்கள். ஒரு மாதத்தில் திருப்பி தந்து விடுகிறேன் என்று கூறி உள்ளார்.

இதனை நம்பிய சீனிவாசன் அவரது வங்கிக் கணக்கில் பல்வேறு தவணைகளில் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் செலுத்தி உள்ளார். அதன் பிறகு அந்த கணக்கில் இருந்து அழைப்புகள் வருவது நின்று போனது.

இதனால் சந்தேகமடைந்த சீனிவாசன் அந்த பேஸ்புக் ஐ.டி.யை ஆராய்ந்து பார்த்தார். அப்போது தான் அது போலி என்பது தெரியவந்தது.

இதையடுத்து சீனிவாசன் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மூலம் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்...

மதுரை நடராஜ நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர், உங்களுக்கு வங்கியில் கடன் வாங்கி தருகிறேன். இதற்காக உங்கள் ஏ.டி.எம். கார்டு நம்பர் மற்றும் ஓ.டி.பி. எண்ணை அனுப்பி வையுங்கள் என்று கூறினார்.

இதனை நம்பிய சுப்பிரமணியன் செல்போன் மூலம் ஏ.டி.எம். கார்டு நம்பர் மற்றும் ஓ.டி.பி எண்ணை அனுப்பி வைத்து உள்ளார். இதனை பயன்படுத்தி அந்த நபர் சுப்பிரமணியனின் வங்கி கணக்கில் ரூ. 25 ஆயிரத்தை அபேஸ் செய்தார்.

இதுதொடர்பாக சுப்பிரமணியம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்து உள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News