செய்திகள்
காய்கறி சந்தை

விழுப்புரம் பஸ் நிலையத்தில் இயங்கிய காய்கறி சந்தை இன்று மூடல்

Published On 2020-06-03 12:13 GMT   |   Update On 2020-06-03 12:13 GMT
விழுப்புரம் பஸ் நிலையத்தில் இயங்கிய காய்கறி சந்தை இன்று மூடப்பட்டது. காய்கறி வாங்க வந்த வியாபாரிகள், பொதுமக்கள் காய்கறி அங்காடி இல்லாத நிலையைக் கண்டு திரும்பிச் சென்றனர்
விழுப்புரம்:

விழுப்புரத்தில் கொரோனா தொற்று காரணமாக விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நிரந்தரமாக இயங்கிவந்த காய்கறி மொத்த வியாபார கடைகள் முழுவதும் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இயங்கத் துவங்கியது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக பஸ்கள் இயக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் காய்கறி மொத்த அங்காடிகள் பஸ்கள் இயக்குவதற்கு இடையூறாக இருக்குமென்று நேற்றிலிருந்து மூடப்பட்டது.

இந்நிலையில் காய்கறி வியாபாரிகள் மாவட்ட கலெக்டரை சந்தித்து புகார் தெரிவித்தனர். இன்றும் புதிய பஸ் நிலையத்தில் காய்கறி அங்காடிகள் இயங்கவில்லை .

நாளை முதல் அதே இடத்தில் இயங்கும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

காய்கறி வாங்க வந்த மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் பொதுமக்கள் என பலரும் காய்கறி அங்காடி இல்லாத நிலையைக் கண்டு திரும்பிச் சென்றனர்

Tags:    

Similar News