செய்திகள்
மரணம்

மதுரை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கிருமி நாசினி மருந்து தெளித்தவர் பலி

Published On 2020-06-03 08:44 GMT   |   Update On 2020-06-03 08:44 GMT
மதுரை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கிருமி நாசினி மருந்து தெளித்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:

மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 51). இவர் மதுரை மாநகர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று செல்வம் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் 2-வது மாடிப்பகுதியில் கிருமி நாசினி மருந்துகளை தெளிக்கும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது திடீரென செல்வம் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செல்வத்தை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செல்வம் மாரடைப்பு ஏற்பட்டு உயரிழந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்த நிலையில் செல்வத்தின் மகன் மணிகண்டன் தனது தந்தை மாரடைப்பால் உயிரிழக்கவில்லை. கிருமி நாசினி மருந்து காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையில் செல்வம் மரணம் தொடர்பாக ஆதி தமிழர் பேரவை நிர்வாகிகள் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்வத்தின் குடும்பத்துக்கு அரசு வேலை மற்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Tags:    

Similar News