செய்திகள்
புழல் சிறை

சிறைகளில் கைதிகளுக்கு கொரோனா- தமிழக அரசு அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு

Published On 2020-06-02 09:55 GMT   |   Update On 2020-06-02 09:55 GMT
தமிழக சிறைகளில் உள்ள கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மொத்தம் 23,495 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 15,776 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 13,170 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 184 ஆக உள்ளது.

சென்னை புழல் சிறை உள்ளிட்ட பல்வேறு சிறைகளில்  உள்ள கைதிகளுக்கும் கொரோனா பரவி உள்ளது. இதனையடுத்து கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. புழல் சிறையில் சிறப்பு மருத்துவ வார்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைதிகளுக்கு கொரோனா தொற்று தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.

தமிழக சிறைகளில் உள்ள கைதிகளில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது?  இதுவரை எத்தனை கைதிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது? எத்தனை கைதிகள் குணமடைந்துள்ளனர்? என்பது போன்ற விவரங்கள் அடங்கிய அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News