செய்திகள்
கொரோனா வைரஸ்

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 2548 பேருக்கு பரிசோதனை

Published On 2020-06-02 08:26 GMT   |   Update On 2020-06-02 08:26 GMT
சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 2548 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாவும், அவர்களில் யாருக்கும் கொரோனா நோய் தொற்று அறிகுறியோ, பாதிப்போ இல்லை எனவும், மருத்துவமனை டீன் பாலாஜிநாதன் தெரிவித்துள்ளார்.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

இந்த நிலையில் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 180 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏற்கனவே கொரோனா வார்டில் பணியாற்றிய டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள், போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வார்டில் 30-க்கும் மேற்பட்டவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்பணியில் உள்ள ஒவ்வொரு குழுக்களும் 7 நாட்கள் பணி புரிந்த பிறகு 7 நாட்கள் தனியார் விடுதியில் தனிமைப்படுத்தப் படுகின்றனர். அதன்பின்னர் அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்த பிறகு அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் இதுவரை மொத்தம் 2548 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாவும், அவர்களில் யாருக்கும் கொரோனா நோய் தொற்று அறிகுறியோ, பாதிப்போ இல்லை எனவும், சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜிநாதன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News