செய்திகள்
தமிழக அரசு

வேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது- தமிழக அரசு அவசர சட்டம்

Published On 2020-06-02 06:39 GMT   |   Update On 2020-06-02 06:39 GMT
வேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழக அரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள், விற்பனை(ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1987ல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, தமிழ்நாடு அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

இந்த அவசர சட்டம், வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப,

*தமிழகத்தில் உள்ள எந்தவொரு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் சந்தைகளிலும், அங்கீகரிக்கப்பட்ட கிடங்குகள் மற்றும் குளிர்பதன மையங்களிலும் விற்பனை செய்வதற்கும்,

* விவசாயிகள் விளைபொருட்களை தங்களை பண்ணையிலோ அல்லது உணவுப் பூங்கா வளாகங்களிலோ அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதற்கும் வழிவகுக்கும்.

மேலும் எந்தவொரு சூழ்நிலையிலும் விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்யும் பொழுது அவர்களிடமிருந்து விற்பனைக் கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என்றும் இந்த அவசரச் சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, முதலமைச்சர் அவர்களின் பரிந்துரையின் பேரில், ஆளுநர் அவர்கள் பின்வரும் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய அவசரச் சட்டத்தினை பிறத்துள்ளார்கள்:-

1, தமிழ்நாடு வேளாண்மை விளைபொருட்கள் விற்பனைச் (ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1987-ல் சீர்திருத்தங்களை கொண்டு வருதல்; மற்றும்

2, விற்பனைக் குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தினை 29.05.2020-க்கு பின்னர், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்தல்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News