செய்திகள்
தமிழக அரசு

வெளிநாட்டு பயணிகள் தமிழகத்திற்கு வந்தால் பிசிஆர் கட்டாயம்- தமிழக அரசு

Published On 2020-06-02 05:28 GMT   |   Update On 2020-06-02 05:30 GMT
வெளிநாட்டிலிருந்து தமிழகத்துக்கு விமானத்தில் வந்தால் கொரோனாவை அறிய பிசிஆர் சோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் விமான பயணத்துக்கான புதிய வழிகாட்டு நெறிமுறையை தெரிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

* வெளிநாட்டிலிருந்து தமிழகத்துக்கு விமானத்தில் வந்தால் கொரோனாவை அறிய பிசிஆர் சோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

* வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வருவோர் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

* விமானத்தில் பயணம் செய்யும், முன்பாகவே தமிழகத்தில் பயணிப்பதற்கான இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும்.

* தமிழகம் திரும்பும் அனைத்து பயணிகளுக்கும் தெர்மல் பரிசோதனை செய்யப்படும்.

* மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் மாநிலங்களில் இருந்து தமிழகத்திதக்கு வருவோருக்கு பிசிஆர் சோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

* வணிக பயன்பாட்டுக்காக 48 மணி நேரத்துக்குள் வெளிநாடு சென்று திரும்பியோர் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News