செய்திகள்
முகக்கவசம்

திருப்பத்தூரில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்- கலெக்டர் அறிவிப்பு

Published On 2020-06-01 10:27 GMT   |   Update On 2020-06-01 10:27 GMT
திருப்பத்தூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாவட்ட கலெக்டர் சிவன்அருள் அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு 5-வது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் எச்சில் துப்புவதும், மது குடிப்பதும் தடை செய்யப்படுகிறது. காய்கறி கடைகள், மளிகைக்கடைகள் ஆகியவை காலை 6 மணியில் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

வருகிற 8-ந் தேதியில் இருந்து உணவகங்களில் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதி அளிக்கப்படும். அரசின் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகளுக்கு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News