செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

திருவண்ணாமலையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 400-ஐ கடந்தது

Published On 2020-06-01 09:20 GMT   |   Update On 2020-06-01 09:20 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 54 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வெளிமாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை வரை சென்னை உள்பட பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் சுமார் 12 ஆயிரத்து 648 பேர் வந்து உள்ளனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 3 ஆயிரத்து 758 பேர் வந்து உள்ளனர்.

நேற்று முன்தினம் வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 361 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதில் காட்டாம்பூண்டி சுகாதார வட்டம் கொளக்குடியில் ஒருவர், கலெக்டர் அலுவலகத்தில் ஒருவர், சின்னகல்லாபாடியில் 2 பேர், சு.பாப்பம்பாடியில் ஒருவர், பெரியகள்ளப்பாடியில் 3 பேர், நரியப்பட்டில் ஒருவர், பண்ணையூரில் ஒருவர், மலப்பாம்பாடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர், திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் கோவில் தெருவில் ஒருவர், விஜயா நகரில் ஒருவர், மங்கலம் அருகே வடகரிக்கிலாம்பாடியில் ஒருவர், மாதுலாம்பாடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், மங்கலத்தில் ஒருவர், இரும்பூண்டியில் ஒருவர், செங்கம் அருகில் வடமாத்தூரில் ஒருவர், வாணாபுரம் அருகே தரடாப்பட்டில் 3 பேர், ரெட்டியார்பாளையத்தில் ஒருவர், சாத்தனூரில் ஒருவர் என கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் புதுப்பாளையம் அருகில் வாசுதேவன்பட்டில் 3 பேருக்கும், செங்கம் சாலையில் ஒருவருக்கும், வேட்டவலத்தில் ஒருவருக்கும், போளூரில் 2 பேருக்கும், போளூர் அருகில் தேப்பநந்தலில் ஒருவருக்கும், பாக்குமரபேட்டையில் ஒருவருக்கும், இழுவபாடியில் ஒருவருக்கும், பாப்பம்பட்டியில் ஒருவருக்கும், கலசபாக்கம் அருகே கீழ்பாளூரில் 3 பேருக்கும், மேலாரணியில் ஒருவருக்கும், சேத்துப்பட்டில் கண்ணனூரில் 2 பேருக்கும், ஜமுனாமரத்தூர் அருகே தும்பகாட்டில் ஒருவருக்கும், நாவல்பாக்கம் அருகே செய்யாறு அம்பேத்கர் நகரில் ஒருவருக்கும், தெள்ளாரில் ஒருவருக்கும், அக்கூர் அருகே புருசையில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இவர்களில் 23 பேர் சென்னையில் இருந்தும், 3 பேர் பெங்களூருவில் இருந்தும், 2 பேர் மும்பையில் இருந்தும், ஒருவர் பீகாரில் இருந்தும், ஒருவர் கொல்கத்தாவில் இருந்தும், ஒருவர் காஞ்சீபுரத்தில் இருந்தும், 3 பேர் கேரளாவில் இருந்தும், 3 பேர் திருச்சியில் இருந்தும், ஒருவர் திருப்பூரில் இருந்தும், ஒருவர் விழுப்புரத்தில் இருந்தும் வந்தவர்கள். ஆக மொத்தம் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 416 ஆக உயர்ந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் 108 குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 307 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News