செய்திகள்
வழக்கு பதிவு

திருவள்ளூர் அருகே கொரோனா ஊரடங்கை மீறி தேவாலய தேர்பவனி- 30 பேர் மீது வழக்கு

Published On 2020-06-01 09:17 GMT   |   Update On 2020-06-01 09:17 GMT
திருவள்ளூர் அருகே கொரோனா ஊரடங்கை மீறி தேவாலயத்தில் தேர்பவனி நடத்தியது தொடர்பாக 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த பன்னூர் கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. ஆண்டு தோறும் தேவாலய விழாவையொட்டி தேர் பவனி நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தேவாலாய விழா நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த நிலையில் நேற்று இரவு தேவாலயத்தில் இருந்து சிறிய தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தகவல் அறிந்ததும் மப்பேடு போலீசார் விரைந்து சென்று தேர் பவனியை தடுத்து நிறுத்தி உடனடியாக தேரை தேவாலயத்திற்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தேர்ப பவனி பாதியில் முடிந்தது.

இதுகுறித்து திருப்பந்தியூர் ஊராட்சி துணை தலைவர் ஆல்பர்ட், தேவாலய நிர்வாகிகள் பாக்கியராஜ், லிமாரோஸ் உள்பட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News