செய்திகள்
கோப்புபடம்

வேலூரில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரிக்கு பஸ்கள் இயக்கப்படும்

Published On 2020-05-31 11:11 GMT   |   Update On 2020-05-31 11:11 GMT
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளுக்குள் சுமார் 300 அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூர்:

வேலூர் மண்டல போக்கு வரத்து கழகத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 10 டெப்போக்கள் உள்ளன.இங்கிருந்து 634 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் அனைத்தும் அந்தந்த டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது போக்குவரத்து மண்டலங்களுக்கு இடையே 50 சதவீத பஸ்கள் இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாளை முதல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளுக்குள் சுமார் 300 அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூரிலிருந்து இந்த 4 மாவட்டங்களுக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்படும். திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து இயக்கப்படாது.

தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படும். அரசு விதிமுறைகளின்படி பஸ்கள் இயக்கம் தொடர்பாக அதிகாரிகள் இன்று ஆலோசனை செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் அரசு பஸ்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

திருவண்ணாமலையில் இருந்து மாவட்டத்தில் உள்ள முக்கிய நகர் பகுதிகள், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஒரு பஸ்சில் 30 பயணிகள் மட்டுமே ஏற்றி செல்ல முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News