செய்திகள்
அரிசி

500 ஆட்டோ டிரைவர்களுக்கு மளிகை நிவாரண தொகுப்பு- அமைச்சர் வழங்கினார்

Published On 2020-05-31 09:27 GMT   |   Update On 2020-05-31 09:27 GMT
திருச்சியில் 500 ஆட்டோ டிரைவர்களுக்கு அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.
மலைக்கோட்டை:

கொரோனாவால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு உதவிகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அளித்து வருகிறார்.

இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதித்துள்ள நிலையில் மீண்டும் தொடங்கியுள்ள அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் பழைய பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலைக்கோட்டை, பாலக்கரை மற்றும் மாநகர பகுதியில் ஆட்டோக்களை இயக்கும் 500 ஆட்டோ டிரைவர்களுக்கு அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

தொடர்ந்து ஆட்டோக்கள் இயங்க எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் வகையில் நிதியுதவியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஜவகர்லால்நேரு உள்ளிட்ட அ.தி.மு.க. பகுதி கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News