செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு

ஜூன் மாதம் முழுவதும் காணொலிக்காட்சி மூலம் வழக்கு விசாரணை: ஐகோர்ட்டு அறிவிப்பு

Published On 2020-05-31 01:38 GMT   |   Update On 2020-05-31 01:38 GMT
ஜூன் மாதம் முழுவதும் காணொலக்காட்சி மூலம் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படும் என்ற ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை ஐகோர்ட்டில் கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்துக்கு பின்னர் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பின்னர் மார்ச் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த அவசர வழக்குகளும் காணொலி காட்சி மூலமே விசாரிக்கப்பட்டன.

இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் நாளை (திங்கட்கிழமை) முதல் அனைத்து வகையான வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அதேநேரம், இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் காணொலி காட்சி மூலமாக மட்டுமே விசாரிப்பார்கள்.

இதுகுறித்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை ‘இ-மெயில்’ மூலம் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்குகள் எல்லாம் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படும். அவர் இந்த வழக்குகளை காணொலி காட்சி மூலமே விசாரிப்பார்கள். ஜூன் மாதம் முழுவதும் இந்த நிலையே நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News