செய்திகள்
புழல் சிறை

கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு- புழல் சிறையில் சிறப்பு வார்டு அமைப்பு

Published On 2020-05-30 03:34 GMT   |   Update On 2020-05-30 03:34 GMT
கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறை வளாகத்தில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் உள்ளது. நேற்று ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13,362 ஆக அதிகரித்துள்ளது. 6,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 113-ஆக உள்ளது.

புழல் மத்திய சிறையிலும் கொரோனா பரவி உள்ளது. 30 கைதிகள் மற்றும் ஒரு தூய்மைப் பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

அத்துடன், புழல் சிறை வளாகத்தில் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மருத்துவ வார்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள சிறைகளில் மொத்தம் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News