செய்திகள்
சூடை மீன்களை காய வைக்கும் மீனவ பெண்கள்

ராமேசுவரத்தில் மீன்கள் விலை ஏறுமுகம்

Published On 2020-05-29 13:29 GMT   |   Update On 2020-05-29 13:29 GMT
ராமேசுவரம் தீவு பகுதியில் தொடர்ந்து மீன்களின் விலை ஏறுமுகத்தில் உள்ளது.
ராமேசுவரம்:

கடந்த 1½ மாதத்திற்கு மேலாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் ஆகிய 4 ஊர்களில் கட்டுப்பாடு மற்றும் நிபந்தனைகளை பின்பற்றி நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்த நிலையில் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட தீவு பகுதியில் மீன்களின் விலை ஏறுமுகமாகவே உள்ளது.

ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு வரை 1 கிலோ சீலா ரூ.600-க்கு விற்பனையானது. தற்போது ரூ.1000-ம் ஆக விலை உயர்ந்து உள்ளது. மாவுலா ரூ.350-ல் இருந்து ரூ.600, பாறை ரூ.300-ல் இருந்து ரூ.400, சூடை ரூ.30-ல் இருந்து ரூ.70 என விலை உயர்ந்துள்ளது. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் மீன் பிடிக்க சென்று வருவதால் தான் அனைத்து வகை மீன்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வரும் பட்சத்தில் மீன்களின் விலையும் குறைய வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. கடந்த 1½ மாதத்திற்கு மேலாக அனைத்து வகை மீன்களும் ஏறுமுகத்தில் இருப்பதால் மீன் பிரியர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

ராமேசுவரம் தீவு பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் 61 நாள் தடை காலம் முடிந்து வருகிற ஜூன் 15-ந் தேதி முதல் மீன்பிடிக்க செல்ல முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News