செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

ராமேசுவரத்தை சேர்ந்த 2 டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-05-29 13:15 GMT   |   Update On 2020-05-29 13:15 GMT
மகாராஷ்டிராவில் இருந்து திண்டுக்கல் வந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்களை வேனில் அழைத்து வந்த டிரைவர்கள் 2 பேரின் ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:

ராமேசுவரத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 7 பேர் கடந்த 22-ந்தேதி அரசு அனுமதி பெற்று சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இவர்களை ராமேசுவரம் மல்லிகை நகர் பகுதியை சேர்ந்த வேன் டிரைவர்கள் 2 பேர் அழைத்து சென்றனர். அவர்களை இறக்கி விட்ட பின்னர் இந்த வேனில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 10 பேரை ஏற்றிவந்து சொந்த ஊரில் இறக்கி விட்டுவிட்டு டிரைவர்கள் ராமேசுவரம் வந்துள்ளனர்.

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து திண்டுக்கல் வந்த 10 பேரையும் சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்களை வேனில் அழைத்து வந்த ராமேசுவரத்தை சேர்ந்த வேன் டிரைவர்கள் 2 பேரையும் நேற்று சுகாதாரத்துறையினர் கண்டறிந்து அவர்களின் ரத்த மாதிரிகளை கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
Tags:    

Similar News