செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனாவில் இருந்து மீண்டவர்களை வழியனுப்பி வைத்த டாக்டர்கள்

Published On 2020-05-29 11:19 GMT   |   Update On 2020-05-29 11:19 GMT
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சையில் இருந்து மீண்ட நபர்களை டாக்டர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 112 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் மட்டும் உயிரிழந்தார். திண்டுக்கல் மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரிகளில் 25 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் பூரண குணமடைந்து மீண்டனர். இதில் கோம்பைபட்டியைச் சேர்ந்த பெண், அவரது 3 வயது மகள், பாறைப்பட்டி, வேம்பார்பட்டி பகுதிகளைச் சேர்நத 6 பேர் குணமடைந்தனர்.

இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.

பூரண குணமடைந்த 8 பேர்களுக்கும் பழங்கள், சத்து மாத்திரைகள் ஆகியவற்றை அரசு மருத்துவமனை டீன் விஜயகுமார், நலப்பணிகள் இணை இயக்குனர் பூங்கோதை, கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, நிலைய மருத்துவர் சந்தானகுமார் ஆகியோர் வழங்கி வழியனுப்பி வைத்தனர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 15 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 2 பேரும் என 17 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News