செய்திகள்
மழை

திருப்பத்தூரில் பலத்த மழை- 50 மின்கம்பங்கள், 15 மரங்கள் சாய்ந்தன

Published On 2020-05-29 09:43 GMT   |   Update On 2020-05-29 09:43 GMT
திருப்பத்தூரில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக 50 மின்கம்பங்கள், 15 மரங்கள் சாய்ந்தன.
திருப்பத்தூர்:

திருப்பத்தூரில் நேற்று மாலை 4.30 மணி அளவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது காற்றின் வேகம் அதிகரித்து சுழல்காற்று வீசியது.

இதில் கலெக்டர் அலுவலகம் எதிரே இருந்த பெரியமேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே வளர்ந்த 60 ஆண்டுகால தேக்கு மரம் கிளைகள் சாய்ந்தன.

இதில் காம்பவுண்ட் சுவர் உடைந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மரத்தின் கிளைகள் பட்டு கார் சேதமடைந்தது. உள்ளே அமர்ந்திருந்த கார் டிரைவர் அலறியடித்துக் கொண்டு வெளியே தப்பி ஓடினார். யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. அருகில் இருந்த மின் கம்பம் உடைந்து விழுந்தது.

மின் கம்பிகள் அருந்து விழுந்தது. உடனடியாக கலெக்டர் சிவன் அருள், நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து உடனடியாக மரத்தை அகற்ற உத்தரவிட்டனர்.

மின்சாரத்துறை நகராட்சி வனத்துறை காவல் துறை ஆகிய துறைகளில் வந்து உடனடியாக மரத்தை அப்புறப்படுத்தி காரை வெளியே எடுத்தனர்.

இதனால் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோன்று இரட்டைமலை சீனிவாசன் பேட்டையில் 100 ஆண்டுகால ஆலமரம் சாய்ந்து. அருகில் இருந்த கோபுர கலசங்கள் மீது விழுந்தது.

மேலும் ஹவுசிங் போர்டு, கசிநாயக்கன்பட்டி, கவுதம பேட்டை உள்ளிட்ட பல்வேறு 15 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

மேலும் திருப்பத்தூர் நகர பகுதியில் 50 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இன்று காலை மின் வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சாலையோரம் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 51.2 மி.மீ மழை பதிவானது. நாட்டறம்பள்ளியில் 24 மி.மீ. மழை பெய்தது. மற்ற இடங்களில் மழையில்லை.

வேலூரில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தில் அதிகபட்சமாக மே 22-ந் தேதி 108.3 டிகிரி வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திரம் நிறைவு நாளான நேற்று 106.9 டிகிரி வெயில் தாக்கியது.

கடுமையான வெயிலுடன் அனல் காற்றும் வீசியதால் மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை மேகங்கள் திரண்டு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சுமார் ½ மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

காட்பாடி, குடியாத்தம் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

மழை அளவு விவரம் மி.மீட்டரில் வருமாறு:-

வேலூர் 15.2, குடியாத்தம்-6, மேல்ஆலத்தூர்-9.8, காட்பாடி-13.5 மி.மீ. மழை பதிவானது.
Tags:    

Similar News