செய்திகள்
யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட காட்சி.

கோவில் யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை

Published On 2020-05-28 04:43 GMT   |   Update On 2020-05-28 04:43 GMT
மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில் யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது
மதுரை:

திருப்பரங்குன்றம் கோவில் யானை தெய்வானை கடந்த 24-ம் தேதி திடீரென துணை பாகன் காளஸ்வரனை தும்பிக்கையால் அடித்து கொன்றது. இதைதொடர்ந்து இந்த யானைக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. மேலும் தினசரி கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி, அழகர்கோவில் யானை ஆண்டாள், திருப்பரங்குன்றம் கோவில் யானை என மதுரை மாவட்டத்தில் மொத்தம் 3 கோவில் யானைகள் உள்ளது.

இதில் பாகனை கொன்ற திருப்பரங்குன்றம் கோவில் யானையை, மதுரை மண்டல கால்நடை துறை இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர், உதவி இயக்குனர் சரவணன், கால்நடை மருத்துவர்கள் முத்துராமலிங்கம், சிவகுமார் ஆகியோர் கொண்ட கால்நடை மருத்துவ குழுவினர் தினசரி பரிசோதனை செய்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள மற்ற இரண்டு கோவில் யானைகளையும் அதன் இருப்பிடமான மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவிலுக்கு சென்று கால்நடை மருத்துவ குழுவினர் நேற்று பரிசோதனை செய்தனர். பின்னர் யானை பாகன்கள் மற்றும் துணை பாகன்களிடம் வெயில் காலம் என்பதால் யானைகளை தினசரி மூன்று வேளை நன்றாக குளிக்க வைக்க வேண்டும். மேலும் பேரீச்சம்பழம், கரும்புகள் உள்ளிட்ட சத்தான உணவு வகைகள், பச்சை தீவனங்களை உண்பதற்கு கொடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News