செய்திகள்
ஒரு மாணவியின் முகம், மற்றொரு மாணவியின் கைகளில் வரையப்பட்டுள்ள கொரோனா வைரஸ்

கல்லூரி மாணவிகளுக்கு கொரோனா ‘மேக்-அப்’- மாணவர் அசத்தல்

Published On 2020-05-25 16:06 GMT   |   Update On 2020-05-25 16:06 GMT
கல்லூரி மாணவிகளுக்கு கொரோனா உருவம் போன்று முகம் மற்றும் கை, கால்களில் மேக்-அப் செய்து பேஷன் டிசைனிங் மாணவர் அசத்தி உள்ளார்.
திருப்பூர்:

திருப்பூர் முதலிபாளையத்தில் நிப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்பு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பின்னலாடை துறை தொடர்பான படிப்புகள் மாணவ-மாணவிகளுக்கு கற்பிக்கப்படுகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விடுமுறையை இந்த கல்லூரி மாணவர்கள் பயனுள்ளதாக மாற்றி வருகிறார்கள். அதன்படி பலரும் புதுப்புது ஆடை வடிவமைப்புகளை வடிவமைத்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது ஒரு மாணவர் கொரோனா மேக்-அப் தயார் செய்து அசத்தியுள்ளார்.

இது குறித்து நிப்ட்-டீ கல்லூரி அப்பேரல் பேஷன் டிசைனிங் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர் ரகு பிரசாந்த் கூறியதாவது:-

உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் எளிதில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பலர் கொரோனா தொடர்பான ஆடை வடிவமைப்புகளை செய்திருந்தனர். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். நான் சற்று வித்தியாசமாக யோசித்தேன். அதன்படி கொரோனா உருவம் போன்று மணப்பெண் மற்றும் மாடல் அழகிகளுக்கு முகம் மற்றும் கை, கால்களில் மேக்-அப் செய்ய பொருட்கள் மற்றும் அந்த வடிவமைப்புகளை தயார் செய்துள்ளேன்.

இதற்கு மேக்-அப் உபகரணங்களை பயன்படுத்தியுள்ளேன். எனது கல்லூரியில் உள்ள எனது மாடல் மாணவிகளுக்கு அந்த மேக்-அப் போடப்பட்டு, புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News