செய்திகள்
அமைச்சர் உதயகுமார்

உசிலம்பட்டியில் குடிமராமத்து பணிகள்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்

Published On 2020-05-23 12:52 GMT   |   Update On 2020-05-23 12:52 GMT
உசிலம்பட்டி பகுதியில் ரூ.3.9 கோடி செலவில் குடிமராமத்து பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
மதுரை:

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் கவுண்டமான நதி மற்றும திருமாணிக்கம் அணைக்கட்டு, மொச்சிகுளம் அணைக்கட்டு, மந்தியூர் அணைக்கட்டு, செம்பரணி அணைக்கட்டு ஆகியவை முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியினை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் 1387 பொதுப்பணித்துறை கண்மாய்களை விவசாயிகள் பங்களிப்போடு குடிமராமத்து திட்டத்தில் ரூ.498.51 கோடி மதிப்பீட்டில் புணரமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் குண்டாறு வடிநிலக்கோட்ட ஆளுகையின் கீழ் ரூ.390 லடசம் மதிப்பீட்டில் 2 கண்மாய்கள், வரட்டாறு மற்றும் கவுண்டமாநதி புனரமைப்பு பணிகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட கரிசல்குளம் கண்மாய் ரூ.53 லட்சம் மதிப்பீட்டிலும் சீல்நாயக்கன்பட்டி கண்மாய் ரூ.27 லட்சம் மதிப்பீட்டிலும், வரட்டாறு பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டிலும் வரட்டாறு முதல் அத்திப்பட்டி வரை ரூ55 லட்சம் மதிப்பீட்டிலும் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம், கவுண்டமாநதி மற்றும் திருமாணிக்கம் அணைக்கப்பட்டு மற்றும் மொச்சிக்குளம் அணைக்கட்டு புனரமைக்கும் பணி ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் நடைபெற உள்ளது.

மக்கள் வைத்த கோரிக்கையை முதல்-அமைச்சரின் பார்வைக்கு எடுத்து சென்றவுடன் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் இருக்க வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் 25-ந் தேதி பிற்பகல் முதல் 28-ந் தேதி முற்பகல் வரை தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது. மக்களின் தாகம் தீர்ப்பதற்காக நிலத்தடி நீர் உயர்வதற்காக ஒரு தொலைநோக்கு பார்வையோடு இந்த அறிவிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News