செய்திகள்
ஆன்லைன் மூலம் பாடம்

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி

Published On 2020-05-23 11:47 GMT   |   Update On 2020-05-23 11:47 GMT
சென்னை மாநகராட்சியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி மற்றும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
சென்னை:

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு அடுத்த மாதம் (ஜூன்) 15-ந் தேதி தொடங்குகிறது. 25-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது. இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கிடையே மாணவர்கள் தேர்வு எழுதுவதால், அவர்களுக்கு மன அழுத்தம் இருக்கும். மேலும் அவர்கள் பெரும் பீதியுடன்தான் தேர்வுக்கு வருவார்கள். இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி மற்றும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

எந்த மாதிரியான பதிலளிப்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து அவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

6820 மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள்.

மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் பாடங்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்காக செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சி நிதியில் தன்னார்வ அமைப்பு மூலம் 5 ஆயிரம் செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளது.

9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் சேர இருக்கும் மாணவ-மாணவிகளுக்கும் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News