செய்திகள்
கனிமொழி

துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை- கனிமொழி

Published On 2020-05-22 06:58 GMT   |   Update On 2020-05-22 06:58 GMT
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை என்று கனிமொழி எம்.பி. ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ம் ஆண்டு மே 22-ந்தேதி  நடைபெற்ற போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி தூத்துக்குடி எம்பியான கனிமொழி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 2-ம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. கலவரத்தைக் கட்டுப்படுத்த’ எனும் பொய்யைக் கட்டவிழ்த்து போராடிய மக்களின் உயிர்குடித்தது அரசு பயங்கரவாதம். துப்பாக்கிச் சூட்டில் சிந்திய இரத்தத்துக்கான நீதி கிடைத்திருக்கிறதா? இல்லை. மக்கள் எழுச்சியின் முன் எந்த ஏமாற்று வேலைகளும் எடுபடாது என்பதை இந்த அரசுக்கு உணர்த்திட நாம் உறுதியேற்போம். தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம்.”

இவ்வாறு அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News