செய்திகள்
வெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா விமான நிலையம்.

அம்பன் புயலால் வெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா விமான நிலையம்

Published On 2020-05-21 07:41 GMT   |   Update On 2020-05-21 07:41 GMT
அம்பன் புயலால் கொல்கத்தா விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காட்சி அளிக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கொல்கத்தா:

வங்கக்கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த அம்பன் புயல் நேற்று வடக்கு-வடகிழக்கை நோக்கி நகர்ந்து பின்னர் மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தின் இடையே கரையை கடந்தது.  பிற்பகல் 2.30 மணிக்கு திஹா-சுந்தரவன காடுகள் இடையே கரையைக் கடக்கத் தொடங்கிய புயல் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து, சுமார் 7 மணியளவில் கரையை கடந்தது.

அம்பன் புயலால் கொல்கத்தாவில் கடும் சூறாவளிக்காற்று வீசியது. 185 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால்ஹுக்ளி, கொல்கத்தா, ஹவுரா ஆகிய பகுதிகள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. 12 பேர் வரை இந்த புயலால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அங்கு பெய்த மழையால் கொல்கத்தா ஏர்போர்ட் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. விமான நிலையத்தின் மேல்தளங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதில் ஏராளமான விமானங்களும் சேதமாகியுள்ளன. இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Tags:    

Similar News