செய்திகள்
வைகை அணை

வைகை அணைக்கு நீர்வரத்து நின்றது

Published On 2020-05-20 09:10 GMT   |   Update On 2020-05-20 09:10 GMT
கோடை மழை ஓய்ந்த நிலையில் வைகை அணைக்கு நீர்வரத்து மீண்டும் நின்றது.
கூடலூர்:

மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக வைகை அணை திகழ்கிறது. மேலும் 5 மாவட்ட விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இந்த நிலையில் கோடை மழை பெய்ததால் அணைக்கு ஓரளவு நீர்வரத்து இருந்தது. நேற்று வரை 8 கன அடி நீர் வந்த நிலையில் இன்று நீர்வரத்து முற்றிலும் நின்றது. அணையின் நீர்மட்டம் 42.39 அடியாக உள்ளது. 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.10 அடியாக உள்ளது. வரத்து 28 கன அடி. 125. கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 36.65 அடி. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 65.60 அடி. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தேக்கடியில் மட்டும் 0.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News