செய்திகள்
கோப்பு படம்

பஸ் போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு நெறிமுறைகள் என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

Published On 2020-05-18 19:53 GMT   |   Update On 2020-05-18 19:53 GMT
ஊரடங்கிற்கு பின்னர் பஸ் போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு நெறிமுறைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை:

ஊரடங்கு முடிந்த பின்னர், அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்தும், ஓட்டுனர், நடத்துனர், பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சுவாமி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் காணொலி காட்சி மூலம் நேற்று விசாரித்தனர். பின்னர், ‘தமிழக அரசு ஏற்கனவே பொது போக்குவரத்து குறித்து அறிவிப்புகளை வெளியிட்டிருந்த போதிலும், ஊரடங்கு முடிவுக்கு வந்தபிறகு, பஸ் பயணம் தொடர்பாக என்னென்ன பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்துள்ளது? என்பது குறித்து போக்குவரத்து துறை செயலாளர் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற ஜூன் 1-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Tags:    

Similar News