செய்திகள்
சிறப்பு ரெயில் - கோப்புப்படம்

டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் உள்பட 1,420 பேர் சிறப்பு ரெயிலில் தமிழகம் வந்தனர்

Published On 2020-05-18 07:38 GMT   |   Update On 2020-05-18 07:38 GMT
டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் உள்பட 1,420 பேர் சிறப்பு ரெயிலில் மூலம் இன்று தமிழகம் வந்தடைந்தனர்.
திருச்சி:

டெல்லியில் கடந்த மார்ச் மாதம் தப்லீக் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் வெளிநாடுகளில்  இருந்தும்,  இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில்  இருந்தும்  இஸ்லாமிய மத போதகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டெல்லி அரசின் தடை உத்தரவை மீறி நடைபெற்ற இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் இந்தியாவில் பல பகுதிகளுக்கும் சென்றனர்.  அவர்களால் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 700 பேர் டெல்லியில் உள்ள தனிமை வார்டுகள் மற்றும்  முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதில் சிலர் உயிரிழந்தனர்.

சிகிச்சை மூலம் குணமடைந்தவர்கள் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். தனிமை காலம் கடந்த    சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. அவர்களை தமிழகத்துக்கு அனுப்பி   வைக்க   கோரி    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் கள்   சிறப்பு   ரெயில் மூலம்   தமிழகம்   அனுப்பி வைக் கப்பட்டனர்.   இந்த ரெயில் டெல்லி  ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மதியம் 2  மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டது.

இந்த ரெயில் இன்று (18ந்தேதி)  அதிகாலை 4.35 மணிக்கு திருச்சியை வந்தடைந்தது.  திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகள் இறங்கியதும்  சமூக இடைவெளியை கடைபிடித்து ஒவ்வொரு வரும் தனித்தனியாக சென்றனர்.  

இந்த ரெயிலில் மொத்தம் 1420 பேர் பயணம் செய்தனர். இவர்களில் 700 பேர் தப்லீக் ஜமாத்  மாநாட்டுக்கு  வந்து டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆவர்.

தப்லீக்  மாநாட்டில் பங்கேற்றவர்களில் 292  பேர் திருச்சியில் இறங்கினர். இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 64 பேர் மட்டும் ரெயில் நிலையத்தில் தயாராக இருந்த தனியார் வாகனம் மூலம் ஜமால் முகமது கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டது.  நோய்  அறிகுறி  இல்லாதவர்கள்  உடனடியாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மாநாட்டில் பங்கேற்ற மற்ற மாவட்டங்களை சேர்ந்த 128 பேரும் அரசு   பஸ்களில்   அவர்களின்  சொந்த  மாவட்டங்களுக்கு  அனுப்பி  வைக்கப்பட்டார்கள். அங்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவ         பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் பங்கேற்றவர்களை தவிர திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்,  சேலம்,  நாமக்கல், திண்டுக்கல்,   மதுரை,   தேனி, கரூர்,   திருப்பூர்,   ஈரோடு, கோவை,   நீலகிரி,   தஞ்சை, திருவாரூர்,   நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 166 பேரும் அதே  ரெயிலில் வந்தனர். அவர்கள் 7 அரசு பஸ்கள்   மூலம்   திருச்சியை அடுத்த   சேதுராப்பட்டியில் உள்ள  அரசு  பொறியியல் கல்லூரிக்கு அரசு பஸ்களில் அழைத்து செல்லப்பட்டனர். திருச்சியில் வந்திறங்கிய 558 பேரில் 65 பேர் பெண்கள் ஆவர்.

இந்த சிறப்பு ரெயில் தொடர்ந்து  நெல்லை வரை இயக்கப்பட்டது. அங்கு   டெல்லி   மாநாட்டில் பங்கேற்றவர்கள்  350  இறங்கினர்.  இவர்கள்  நெல்லை, தென்காசி,    தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தவர் கள் ஆவர். இவர்கள் தவிர 512 பேர் என மொத்தம் 862 பேர் நெல்லை வந்தடைந்தனர்.     அவர்கள் தகுந்த பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊர்களுக்கு அரசு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

Tags:    

Similar News