செய்திகள்
முக ஸ்டாலின்

தொற்று எண்ணிக்கையை குறைக்க பரிசோதனைகள் குறைப்பா? - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

Published On 2020-05-17 21:54 GMT   |   Update On 2020-05-17 21:54 GMT
கொரோனா தொற்று பரிசோதனைகளைக் குறைப்பதன் மூலம், நோய்த் தொற்று எண்ணிக்கையை குறைத்து காட்ட, தமிழக அரசு முயற்சி செய்கிறது என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மே 7-ம் தேதி 14 ஆயிரத்து 102 என்கிற அளவில் இருந்த பரிசோதனை எண்ணிக்கை, தற்போது 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டு 8 ஆயிரத்து 270 ஆக உள்ளது. 

பரிசோதனைகளைக் குறைக்க கூடாது என்று மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ள நிலையில் பரிசோதனைகளை குறைப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

Similar News